சோகண்டி ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

ஸ்ரீபெரும்புதூர்:  சோகண்டி ஊராட்சியில் ரூ.14.43 லட்சம் மதிப்பில்  கட்டப்பட்ட புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நேற்று திறக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சோகண்டி ஊராட்சியில் 1000க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனையடுத்து, பொது குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.14.43 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான துவக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் சோகண்டி பால்ராஜ் தலைமை வகித்தார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா பால்ராஜ் கலந்து கொண்டு குடிநீர்  விநியோகத்தை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி போஸ்கோ, சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ், சோகண்டி ஊராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள்,  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை