சொந்தக் கட்சியினரையே உளவு பார்க்கும் விந்தையான விஷயம் தாமரை கட்சியில் நடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை தலைவராக காக்கி பணியை துறந்தவர், ஆடும் ஆட்டத்தை தாங்க முடியாமல் பலர் கட்சியில் இருந்து வெளியேறி வருகிறார்களாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டு தாமரை லீடரு சொந்த கட்சிக்காரங்களையே வேவு பார்க்குறாரு, கட்சியில் பல வருஷமா இருப்பவர்களையும் மதிக்கமாட்டாரு என்று அடுத்தடுத்து சர்ச்சைகள் பூதாகரமாக கிளம்பிக்கிட்டு இருக்கு. இதற்கிடையில் பெரும்பாலான மாவட்ட தலைவர்களும் அவரது ரூட்டிலேயே பயணிப்பதாக புதிய பூதம் கிளம்பியிருக்கு. இதில் அதியமான்கோட்டை மாவட்டத்தின் தாமரை தலைவரு மேலே, முதற்கட்டமாக புகார்கள் பறக்க ஆரம்பிச்சிருக்காம். முரசு கட்சியில் முன்பு எம்எஎல்ஏவாக இருந்த அவரு, சில ஆண்டுகளுக்கு முன்புதான் தாமரை கட்சியில் இணைஞ்சாரு. எம்எல்ஏவாக இருந்த அனுபவத்தில் எங்க கட்சியை நல்லபடியாக வழிநடத்துவாருன்னு நாங்கெல்லாம் நம்பினோம். ஆனால் அவரு, யாரையுமே அரவணைச்சு போறதில்லை. இவரு வந்த பிறகு மாவட்டத்தில் பல கோஷ்டிகள் உருவாகி இருக்கு. எந்த ஆலோசனை கூட்டத்திற்கும் நிர்வாகிகளை அழைப்பதில்லை. பல்வேறு கட்சிகளில் இருந்து பலர், எங்க தாமரை கட்சிக்கு வருவதற்கு ரெடியா இருக்காங்க. ஆனால் மாவட்டத் தலைவரின் அணுகுமுறைகள் சரியில்ல. இதனால் தற்போதைய தலைவர் இருக்கும் வரை உங்க கட்சியில் ேசர மாட்டோம் என்று ஜகா வாங்கிக்கிட்டு இருக்காங்க. எனவே கட்சியில ஆட்கள் வந்து ேசரணும்ன்னா மாவட்ட தலைவரை உடனடியாக நீக்கணும் என்று கொந்தளிச்சுக் கிட்டு இருக்காங்களாம். இதுமட்டுமில்லா தாமரையின் ஐடி பிரிவில இருந்து இலைக்கு தாவின பிறகு, தகவல் ஒட்டுகேட்பு, கட்சி தலைவர்களை உளவு பார்ப்பது, அவர்களை ஐடி, ஈடி மூலம் மிரட்டும் மூவ்களை, மலையான தமிழக தலைவர் எடுத்து வருகிறாராம். இன்னொரு பக்கம், தேர்தலுக்கு முன்னதாக அவை தூக்கிவிட்டு பிரபலமான பெண் ஒருவரை தலைவராக போடப்போறாங்களாம்… அது உண்மையா என்பது தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக முடிவு செய்ய டெல்லி தலைமை முடிவு செய்து இருக்காங்களாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஊழல் பணத்தில் கண்ணை சிமிட்டும் பங்களாவை கட்டி அதிரடித்த கீழ் நிலை ஊழியரை பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவையில் தேசிய பறவை பெயர் கொண்ட கிராம பஞ்சாயத்தில் பெண்  எழுத்தர் ஒருவர் அசத்தி வருகிறாராம். இவர் போலி பில்களை தயாரித்து அரசு  கஜானாவில் இருந்து பணம் பறிப்பதில் கில்லாடி என்கிறார்கள். ஊழல்களை மேலதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்க, பல்வேறு தில்லாலங்கடி வேலைகளில் இறங்கி உள்ளாராம். அவ்வப்போது மேலதிகாரிகளையும்  ‘திருப்தி’ படுத்தி வருகிறாராம். இவர், சமீபத்தில் ஒரு கோடியில் புது பங்களா  கட்டினாராம். எல்லாம் சொந்த பணமாம். இதை, கோவை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீசார்  மோப்பம் பிடித்து, பணியில் சேர்ந்த தேதி, மாமானார் செல்வம், கணவர் சம்பளம் என்று பட்டிலிட்டு வர்றாங்க. இவர், எவ்வளவு நாளாக இப்பணியில் உள்ளார். எந்தெந்த வகையில் காசு குவிக்கிறார். யார் யாருக்கெல்லாம் பங்கு  கொடுக்கிறார் என பல்வேறு கோணங்களில் தகவல் திரட்டி வர்றாங்க. இவரை பற்றி தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ஆவேசமாக பேசிக் கொள்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பூட்டு மாவட்ட மாஜி மந்திரிக்கு சிலையை பற்றியும் தெரியல… இலை சின்னத்தையும் தெரியல…’’ இலை கட்சிக்காரர்கள் தலையில் அடித்து கொண்ட கதையை சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு நகரத்தில் இலைக்கட்சித் தலைவியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய மாஜி உளறல் மந்திரியானவர், ‘இலை சின்னம் என்பதற்கு பதிலாக சிலை சின்னம் என்று சொன்னாராம். இதைக்கேட்ட இலைக்கட்சியினர், ‘சிலை சின்னமா.. இலை சின்னமா என்று குழம்பிட்டாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது… இலைக்கட்சி சின்னத்தைத்தான், சிலை என சொல்லியிருக்கிறார் என்று. எந்த மேடையில்தான் இவர் உளறாமல் சரியா பேசப்போறாரோ. ஏற்கனவே, கட்சியில இருக்கிற பிரச்னை போதாதுன்னு, இவர் வேற டார்ச்சர் பண்றாரே என தொண்டர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேனி ஆதரவாளர்கள் பாண்டியில வேறு கட்சிக்கு தாவும் படலம் வேகமாக நடக்குதாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் மாவட்டத்தில் சேலம் தரப்பை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவருக்கு எதிராக தேனி அணி உருவாச்சாம். மாஜி எம்பி சேவல் ஏழுமலை தலைமையில் செயல்பட்டு வந்த இந்த அணி, மாஜி அமைச்சரின் அதிருப்தியால் இருந்தவர்களையும் ஒருங்கிணைத்து வைத்திருந்தார்களாம். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு தேனிக்காரருக்கு தொடர் பின்னடைவு ஏற்பட்டதால், இனிமேலும் இங்கு காலம் தள்ளமுடியாதென்று மாற்றுக்கட்சிக்கு செல்ல ரகசிய கூட்டத்தையும் போட்டாங்க. மீண்டும் தேனி அணிக்கு செல்லலாம் என்றால், உள்ளூர் மாஜி அமைச்சர் தடையாக இருக்கிறாராம்.  அவரையும் மீறி சென்றால் கட்சியில் பதவி கிடைத்து வளரவே முடியாதாம். அந்த அளவுக்கு ‘அண்டர் ஸ்டாண்டிங்கில்’ இருக்கார்களாம். இதனால், தாமரைக்கட்சி இப்பவே தடுமாறு அங்கே வேண்டாம். தமிழகத்தில் அதன் வளர்ச்சி அதள பாதாளத்தில் இருக்காம். வேறு எந்த கட்சிக்கு செல்வது என்று ரகசிய கூட்டத்தை போட்டிருக்கிறார்களாம் தேனிகாரர் அணியினர். தற்போதைய தகவலின்படி தேசிய கட்சிக்கு தாவும் முடிவில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘ரேஷன் அரிசி கடத்துவதில் ரயில்களில் உள்ள பாதுகாப்பு வேறு எதிலுமே இல்லை என்று கடத்தல்காரர்கள் நினைக்கிறாங்களாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல, ஜோ என்ற எழுத்துல தொடங்கி பேட்டை என்று முடியுற ஏரியாவுல ரயில்நிலையம் இருக்குது. இந்த ரயில்நிலையம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் வந்து செல்வதால, ரயில்கள்ல பயணிகள் கூட்டம் அலைமோதுது. அதேசமயம் கடத்தலும் எந்த தடையும் இல்லாம நடக்குதாம். இந்த ரயில்நிலையம் வழியாக போகிற, ரயில்கள்லதான், கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் நடக்குதாம். அவங்க ஏதோ, கணக்கு காட்டுறதுக்கு கேஸ் போடுறாங்களாம். இதுல தனிப்படை காக்கிகள் வரும்போது மட்டும் ரயில்கள்ல கடத்தல்காரங்க, சிக்குறாங்களாம். ஆனா, உள்ளூர் ரயில்படை காக்கிகள் ரெய்டு நடத்துறாங்களாம். ஆனா யாருமே சிக்க மாட்டேங்குறாங்களாம். பேட்டை ரயில் நிலையத்துல இப்படி நடக்குதுன்னா. வெயிலூர் மாவட்டத்துல இருக்குற பாடி லிமிட்லயும் இதேமாதிரி நடக்குதாம். இதெல்லாம் சின்ன மேட்டராம். ஹாவாலா தொடங்கி கோல்டு, சில்வர்னு பெரிய, பெரிய கடத்தல் எல்லாமே ரயில்லதான் நடக்குதாம்… இதை எப்படி தடுப்பது என்று நேர்மையான அதிகாரிகள் யோசித்து கொண்டு இருக்காங்க…’ என்றார் விக்கியானந்தா….

Related posts

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா