சொத்தை அபகரித்து வீட்டை விட்டு விரட்டி விட்டனர்

நாகர்கோவில், ஜூன் 20: குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள கீழ ஆலன்விளை பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி தாய்(72). இவர் நேற்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் அகில இந்திய முற்போற்கு பெண்கள் சங்க மாவட்ட தலைவர் கார்மல், துணை தலைவர் தங்கலெட்சுமி ஆகியோருடன் வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். எனது கணவர் இறந்து விட்டார். குருந்தன்கோடு வில்லேஜில் எனக்கு சொந்தமாக 4 சென்ட் வீட்டுமனை மற்றும் வீடு உள்ளது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும். என்னிடம் இருந்து எனது வீட்டை எனது மகன் எழுதி வாங்கிக்கொண்டார். நான் வீட்டின் ஒரு அறையில் வசித்து வருகிறேன். எனக்கு சாப்பாடு தருவது இல்லை. நான் சமைத்து சாப்பிட்டால் மட்டும் தான் எனக்கு உணவு உண்டு.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி என்னை எனது மகனும், மருமகளும் சேர்ந்து தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். காயம் அடைந்த நான் குளச்சல் அரசு மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பினேன். எனது சொத்துக்களை சட்டவிரோதமாக எழுதி வாங்கி எனக்கு உணவு தராமல் வீட்டை விட்டு விரட்டி, சித்ரவதை செய்யும் எனது மகன், மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்னிடமிருந்து ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்துக்களை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை