சொத்து வரி பாக்கியை வசூலிக்க சென்ற மாநகராட்சி ஊழியரை தாக்கிய பெண்: போலீசார் விசாரணை

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, திருவிக நகர் மண்டலம், 64வது வட்டத்தில் கோஜம் (38) என்பவர் வரி வசூல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர், நேற்று காலை கொளத்தூர் தென்பழனி நகரில் உள்ள மாணிக்கம் என்பவர் வீட்டிற்கு சென்று, கடந்த 10 வருடங்களாக சொத்து வரி செலுத்தாமல்  ரூ.8000 பாக்கி வைத்துள்ளீர்கள். அதை உடனே செலுத்த வேண்டும், என கூறியுள்ளார். இதற்கு, வீட்டில் இருந்த மாணிக்கத்தின் மனைவி சீதா, ‘எங்களிடம் பணம் இல்லை.  சொத்து வரி கட்ட முடியாது,’ என்று கூறியுள்ளார். இதையடுத்து கோஜம், வரி பாக்கி நோட்டீசை மாணிக்கம் வீட்டு முன்பு ஒட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீதா, தகாத வார்த்தைகளால் கோஜத்தை திட்டியதுடன், கையில் வைத்திருந்த பாத்திரத்தால் அவரை  சரமாரியாக தாக்கி உள்ளார்.  வீட்டு முன்பு ஒட்டிய நோட்டீசையும் கிழித்து எறிந்து உள்ளார். இதனால், அவருடன் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது