சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: மாநகராட்சியில் இருந்து அதிமுக வெளிநடப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியின் இன்று நடந்த பட்ஜெட் கூட்டதில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டரங்கில் இன்று காலை நடந்தது. காலை 9.30 மணி முதலே பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தர ஆரம்பித்தனர். காலை 10 மணிக்கு மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது அதிமுக உறுப்பினர்கள் 15 பேர் எழுந்து நின்று சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்து பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு மேயர் பிரியா, நிச்சயமாக தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு பேச அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து மன்றத்தை விட்டு வெளியேறினர். வெளியே 145வது வார்டு உறுப்பினர் சத்தியநாராயணன் கூறியதாவது: சொத்து வரி பன்மடங்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வுகாரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வாடகை வீட்டில் வசிக்கும் நபர்களுக்கு வாடகை பன்மடங்கு உயர்த்தப்படும். இதனால் ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே சொத்து வரி உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார். பின்னர் கோஷமிட்டபடி புறப்பட்டுச் சென்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை