சொத்து தகராறில் வெறிச்செயல் மகன் குடும்பத்தையே தீ வைத்து கொன்ற முதியவர்

திருவனந்தபுரம்: இடுக்கி  அருகே சொத்து தகராறில் வீட்டுக்கு தீ வைத்து மகனின் குடும்பத்தை தந்தை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மகன்,  அவரது மனைவி, 2 பெண் குழந்தைகள் ஆகிய நான்கு பேர் பரிதாபமாக  இறந்தனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே  சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீது (79). மனைவி ஏற்கனவே இறந்துவிட்டர். இவரது மகன் அப்துல் பைசல் (45).  இவருக்கு ஷீபா (44) என்ற மனைவியும், மெஹர் (16), அப்சானா (14) என்ற 2  மகள்களும் இருந்தனர்.ஹமீது தன் மகன் குடும்பத்துடன்  வசித்து வந்தார். தந்தை, மகனுக்கு இடையே சொத்துப் பிரச்னை  இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னை மகன் கவனிக்கவில்லை என்று கூறி எழுதி ெகாடுத்த சொத்தை  திரும்ப கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பைசல் வழக்கம்போல்  குடும்பத்துடன் ஒரே அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.  அப்போது, நள்ளிரவு 12 மணியளவில் அறைக்கதவை வெளிப்புறமாக பூட்டிய ஹமீது,  அறையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். யாராவது வந்து காப்பாற்றக்கூடாது என்பதற்காக தண்ணீர் தொட்டியில் உள்ள எல்லா தண்ணீரையும் திறந்து விட்டுள்ளார். இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது, அறையின்  கழிப்பறையில் பைசல் குடும்பத்தினர் இறந்த நிலையில் கிடந்தனர். போலீசார்   வழக்குப்பதிவு செய்து ஹமீதை கைது செய்தனர். …

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது