சொத்துக்களை பறித்துக்கொண்டு விரட்டியதால் சாலையில் தவிக்கும் முதியவர்

திருத்தணி: சொத்துக்களை பறித்துக்கொண்டு உறவினர்கள் விரட்டியடித்ததால் சாலையில் முதியவர்  ஒருவர் பரிதவிக்கிறார்.  ராணிப்பேட்டை மாவட்டம் நாகால் அம்மன் நகர், பங்காரு கண்டிகையை சேர்ந்தவர் சக்திவேல் (69). கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருடைய மனைவி காலமாகி விட்டார்.  குழந்தைகள் இல்லை. சக்திவேலின் சொந்தங்கள் சொத்துக்களை பறித்துக்கொண்டு அவரை விரட்டியடித்து விட்டனர். இதனால் வேறுவழியின்றி மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.  சக்திவேல், திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் சாலையின் ஓரம் முடங்கிக் கிடக்கிறார். மழையிலும் வெயிலிலும் குளிரிலும் அங்கேயே அவதிப்படுகிறார். அந்த வழியாக செல்லும் உதவும் மனப்பான்மை உள்ள யாராவது அவருக்கு உணவு கொடுத்தால் உண்கிறார். அவரால் நடந்து சென்று யாரிடமும் உணவுக்கு கையேந்தக்கூட முடியாத நிலையில் உள்ளார்.  எனவே மாவட்ட ஆட்சியர், சக்திவேலுக்கு உரிய உதவிகிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.    …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை