சைபர் குற்றங்களை தடுக்க ரூ.6.5 கோடியில் சைபர் லேப்: போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னை: சைபர் க்ைரம் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.6.5 கோடி செலவில் சென்னையில் சைபர் லேப் தொடங்கப்பட்டுள்ளது. இந்த லேப், 10 நாளில் செயல்பாட்டிற்கு வரும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து 15 நாட்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, அடையாறு எல்.பி.சாலை சிக்னலில் நடைபெற்ற நிகழ்ச்சியை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி.சரத்கர் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர். பின்னர் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது: சாலையில் பாதுகாப்போடு வாகனங்களை இயக்குபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் சிறிய பரிசுகள் அளித்து ஊக்கப்படுத்த உள்ளோம். சென்னையில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு குற்றப்பின்னணியில் உள்ள நபர்களை கைது செய்து வருகிறோம். இதனால் கடந்த 8 மாதங்களில் கொலை எண்ணிக்கை சதவீதம் குறைந்துள்ளது. சைபர் குற்றங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் நிர்பயா திட்டத்தின் மூலம் ரூ.6.5 கோடியில் சென்னையில் சைபர் லேப் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லேப், 10 நாட்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடும் போது அவரது சீருடையில் கேமரா பொருத்தி பணியில் ஈடுபட அறிவுறுத்தி இருக்கிறோம். போதை பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில் இயங்கி வந்த போதைப் பொருள் தயாரிக்கும் லேப்பை அழித்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் குறித்து மாணவர்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

திருத்தணி முருகன் கோயிலில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு