சேலம் தொழில் அதிபர் குடும்பத்துடன் காரில் தற்கொலை புதுகையில் 5 பேர் உடல் தகனம்

புதுக்கோட்டை, செப்.27: கடன் தொல்லையால் புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் தகனம் செய்யப்பட்டு சேலம் தொழில் அதிபரின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட்டது. சேலம் டவுன் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த மணிகண்டன்(55), இவரது மனைவி நித்யா(50), இவர்களது மகன் தீரன் (21), மகள் நிகரிகா (20), மணிகண்டனின் தாய் சரோஜா(70). மணிகண்டன் தனது வீட்டிலேயே எஸ்.எம்.மெட்டல் என்ற நிறுவனம் நடத்தி வந்ததும், கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை சிப்காட் உள்ளிட்ட பகுதியில் பார்டனராக காப்பர் நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் அச்சமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.4 கோடிக்கு கடனாக பொருட்களை மணிகண்டன் வாங்கினார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காததால் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நிறுவன உரிமையாளர் புகார் செய்தார். அதன் பேரில் கடந்த 23ம் தேதி நேரில் ஆஜராக மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அன்றையதினம் அவர் ஆஜராககாததால் செப்டம்பர் 26ம் தேதி (நேற்று) மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவர் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் நகர சிவமடம் அருகே நேற்று முன்தினம் காரில் தற்கொலை செய்து கொண்டார். இதைதொடர்ந்து கார் கதவுகளை திறந்து போலீசார் சோதனை செய்தபோது உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் தொழிலில் நஷ்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணம் கேட்பதால் மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்றோம். எங்களது உடல்களை இங்கேயே தகனம் செய்யுங்கள். வேறு யாருக்கும் சிரமம் கொடுக்க வேண்டாம்.

எங்களின் கடைசி ஆசையாக இதை நிறைவேற்ற வேண்டும். இதையடுத்து 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு நேற்று பிரேத பரிசோதனை முடிந்தது. அதை தொடர்ந்து 5 பேர் உடல்களையும் அவர்களது உறவினர் சதீஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி புதுக்கோட்டை போஸ்நகர் சுடுகாட்டில் 5 பேரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது