சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்

சேலம், ஆக.20: சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழிற்நுட்பக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது, கேரளா எர்ணாகுளத்தைச் சேர்ந்த லட்சுமி மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து துறையின் டீன் செந்தில்குமார் கூறுகையில், ‘இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் இணைந்த மருத்துவ பயிற்சி மற்றும் சிறந்த வேலை வாய்ப்பை வழங்கவுள்ளோம். குறிப்பாக கேரளாவில் இருந்து எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, தங்கள் மாநிலத்திலேயே சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்,’ என்றார். இதில் துறையின் டீன் மற்றும் லட்சுமி மருத்துவமனை மனிதவள மேம்பாட்டு அதிகாரி நாராயணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அதிகாரி பேராசிரியை தமிழ்ச்சுடர், உதவி பேராசிரியை உமா மகேஸ்வரி செய்திருந்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி