சேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: கள்ளக்காதல் ஜோடி மீது வீடு புகுந்து தாக்குதல்

சேலம்: சேலம் அருகே நள்ளிரவில் கள்ளக்காதல் ஜோடி மீது வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட கணவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகேயுள்ள ஆவடத்தூர் எல்லைக்காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (28), தறித் தொழிலாளி. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது சின்னமாமனார் படவெட்டி என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ரங்கசாமி, வீரக்கல் கக்குவான் மாரியம்மன் கோயில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுந்தரத்தின் மனைவி சுகுணா (28) என்பவருடன் ரங்கசாமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்த ரங்கசாமியின் மனைவி, அவரை விட்டு தனது குழந்தையுடன் பிரிந்துச் சென்று விவாகரத்து செய்து கொண்டுள்ளார். இக்கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த சுகுணாவின் கணவர் சுந்தரம், சகோதரர்கள் அழகேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரங்கசாமியை கண்டித்து, அந்த ஊரை விட்டு விரட்டியுள்ளனர். இதனால், ரங்கசாமி தனது சொந்த ஊரான ஆவடத்தூர் எல்லைக்காட்டுவளவுக்கு வந்து தன் வீட்டில் தங்கியுள்ளார். கணவருடன் சென்ற சுகுணா, அவ்வப்போது ரங்கசாமியின் வீட்டிற்கு வந்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ரங்கசாமியின் வீட்டிற்கு சுகுணா வந்துள்ளார். அப்போது நான் இனி தனது கணவருடன் செல்ல மாட்டேன், இங்கேயே தங்க போகிறேன் எனக்கூறி இரவில் தங்கியுள்ளார். கள்ளக்காதல் ஜோடி இருவரும் இரவில் ஒன்றாக தங்கிய நிலையில், நள்ளிரவு வீட்டின் கதவை மர்மநபர்கள் தட்டியுள்ளனர். ரங்கசாமி கதவை திறந்து பார்த்தபோது, சுகுணாவின் கணவர் சுந்தரம், சகோதரர்கள் அழகேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இருந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்குள் புகுந்து ரங்கசாமி, சுகுணா ஆகிய இருவர் மீதும் கொடூரமாக தாக்கினர். இதில், சுகுணாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரங்கசாமியும் படுகாயமடைந்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகே வசிக்கும் நபர்கள் ஓடிவரவும் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் தப்பியோடினர். இதையடுத்து படுகாயமடைந்த கள்ளக்காதல் ஜோடியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை நடத்தி, கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சுந்தரத்தை (38) கைது செய்தனர். அழகேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது

குழந்தையுடன் மனைவி மாயம் மாமியார், மூதாட்டியை வெட்டி கொன்ற மருமகன்