சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து அதிமுக வேட்பாளர் எஸ்கேப்: தனியார் டெஸ்டில் நெகட்டிவ் வந்ததாக விளக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சி 58வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பாண்டியன் (55), கடந்த 3 நாட்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த திமுக பிரதிநிதி சின்னையன் என்பவரை தாக்கினார். அன்னதாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேட்பாளர் பாண்டியனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட், நீதிமன்ற காவலுக்கு அனுப்பியநிலையில், நெஞ்சுவலிப்பதாக பாண்டியன் கூறினார். இதனால், அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, வேட்பாளர் பாண்டியனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவரை கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதனிடையே வேட்பாளர் பாண்டியனுக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. இதனால் ஜாமீனில் பாண்டியன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் இருந்து மருத்துவர்கள் உள்பட யாரிடமும் எதுவும் கூறாமல் வேட்பாளர் பாண்டியன் தப்பிச் சென்றார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்திருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். நேற்று காலை, தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட கொரோனா டெஸ்டில் தனக்கு நெகட்டிவ் வந்துள்ளது. அதனால், வீட்டுக்கு திரும்புகிறேன் எனக்கூறிவிட்டு, அங்கிருந்து அதிமுக வேட்பாளர் பாண்டியன் சென்றுள்ளார். …

Related posts

பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது மேலும் இரு வழக்கு