சேலத்தில் 15 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு: ரூ.3 கோடிக்கு மேலாக புத்தகங்கள் விற்பனை!

சேலம்: சேலத்தில் 15 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவுபெற்றது. சுமார் 3 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. சேலம் மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய புத்தக திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி திடலில் நடைபெற்ற இந்த புத்தக திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில் 50,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கலை, இலக்கியம், போட்டி தேர்வு நூல்கள், சரித்திர நாவல்கள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் வரவேற்கும் வகையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. புத்தக திருவிழாவின் நிறைவு நாளையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. நாட்டுப்புறப்பட்டு, பரதநாட்டியம், செண்டைமேளம் உள்ளிட்டவை புத்தக விரும்பிகளை பெரிதும் கவர்ந்தது. 15 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக திருவிழாவில் 3 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. வரலாற்று நாவல்களை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கியதாகவும் குறிப்பாக பொன்னியின்செல்வன் புத்தகம் மாணவ மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.  …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை