சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நீண்ட நாள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டரிடம் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மனு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்னைகளை மனுவாக கலெக்டரிடம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி, ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதி பிரச்னைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சென்னை கலெக்டர் அமிர்தஜோதியிடம் நேற்று காலை மனு வழங்கினார். அதில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நீண்ட நாள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது, எம்எல்ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, பரந்தாமன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை