சேந்தமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் 37 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

சேந்தமங்கலம், செப்.1: சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் 10, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். நகர திமுக செயலாளர் தனபாலன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்று பேசினார். ந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்துகொண்டு, 137 மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ₹10 ஆயிரம், 2ம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ₹5 ஆயிரம், 3ம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ₹2500, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ₹5 ஆயிரம், 2ம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ₹2500ம், 3ம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ₹1500 கல்வி ஊக்கத் தொகையை, தனது சொந்த நிதியிலிருந்து மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, உதவி தலைமை ஆசிரியர் வெங்கடாஜலம், பேரூர் பொருளாளர் விஜய் மோகன், துணைத் தலைவர் ரகு ராஜா, வார்டு கவுன்சிலர் விஜயன், திமுக நிர்வாகிகள் சிங்காரம், கோபிநாத், சூர்யாராஜ், முகமது ரபீக், மோகன், சந்திரசேகர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை