சேத்தியாத்தோப்பு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் சரக்கு லாரிகளால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோடு பகுதியில் பிரதான சாலையோரம் நிறுத்தப்படும் சரக்கு லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோடு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வர்த்தக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள், டாஸ்மாக் கடை உள்ளிட்டவைகள் உள்ள பகுதியில் சாலையோரம் கனரக வாகனங்கள், கார்கள், சரக்கு லாரிகளை ஓட்டுனர்கள் சகட்டுமேனிக்கு சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நடந்து செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி வாகன விபத்துக்களும் நடைபெறுவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் விசேஷ நாட்கள் மற்றும் வாரச்சந்தை நாளான புதன்கிழமை பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் சரக்கு லாரிகள், கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என சேத்தியாத்தோப்பு நகர வாசிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு