சேது பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்

மதுரை, ஜூன் 28: மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பாக, ஆட்டோமோட்டிவ் மற்றும் ஏரோ ஸ்பேஸ் பயன்படுத்துவதற்கான உற்பத்தி பற்றிய கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் துவங்கியது. நிகழ்விற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகமது ஜலீல் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ்.எம்.சீனிமுகைதீன், எஸ்.எம்.சீனி முகமது அலியார், எஸ்.எம்.நிலோஃபர் பாத்திமா, எஸ்.எம்.நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

புவனேஸ்வர் சிஎஸ்ஐஆர் முதன்மை விஞ்ஞானி சங்கரன் பெங்களூரு டிஆர்டிஓ இணை இயக்குனர் மற்றும் விஞ்ஞானி ராம்பிரபு, திருச்சி என்ஐடி பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் ரங்கசாமி பொறியியல் கல்லூரி பேராசிரியர் சரவணகுமார் ஆகியோர், நடைமுறையில் உள்ள ஆராய்ச்சிகளை பற்றியும், ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய தலைப்புகள் பற்றியும் சிறப்புரையாற்றினர். இயந்திரவியல் துறை தலைவர் அருண் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். அக்ரி பொறியியல் துறை தலைவர் முத்துச்சோலை ராஜன் நன்றி கூறினார். கருத்தரங்கு ஏற்பாட்டை இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை