சேது பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு

மதுரை, ஏப். 16: மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்த மாணவ மாணவிகளுக்கு வரும் ஏப்.29ம் தேதியன்று கல்லூரி வளாகத்தில் சேது ஊக்கத்தொகை தேர்வு நடைபெற உள்ளது. இதில் 100 மதிப்பெண்களுக்கு மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் மூலம் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கடந்தாண்டு இந்த தேர்வின் மூலம் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றனர்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சேது கல்லூரி இணையதளம் மூலமாக அல்லது கொடுக்கப்பட்ட லிங்கில் https://sethumerittest.in/registration தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள், பெற்றோர்களுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும். இந்த தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு கணிதத்துறை தலைவர் லட்சுமணராஜை, 99449 62060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தலைமையில் கணினித்துறை டீன் சிவரஞ்சனி, கணிதத்துறை தலைவர் லட்சுமண ராஜ் மற்றும் கல்லூரி தேர்வாணைய தலைவர் பேராசிரியர் முரளி கண்ணன் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு