சேது பொறியியல் கல்லூரிக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கல்

 

விருதுநகர், ஆக.19: சேது பொறியியல் கல்லூரிக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சேது பொறியியல் கல்லூரி NAAC தரச்சான்றிதழ் பெறுவதற்காக டிச.30ம் தேதி விண்ணப்பம் செய்தது. NAAC ஆய்வுக்குழு கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில் கல்லூரிக்கு வருகை தந்து ஆய்வு செய்தனர். NAAC ஆய்வுக் குழுவானது பாடத்திட்டம், கற்றலும் கற்பித்தலும், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் சமூக சேவை, கட்டமைப்பு, கற்பித்தலுக்குரிய வசதிகள், மாணவர்களுக்கு ஊக்கமும், முன்னேற்றமும், தலைமைத்துவம், ஆளுமை மற்றும் நிர்வாகத்திறன், கல்லூரியின் சிறந்த பயிற்சிகளும், மதிப்புகளும் ஆகிய ஏழு தலைப்புகளின் கீழ் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், சேது பொறியியல் கல்லூரிக்கு A++ கிரேடு தேசிய தர மதிப்பீடு மற்றும் தரச்சான்றிதழ் குழுவால்(NAAC) ஆக.12ம் தேதி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை