சேதமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு: இடித்து அகற்றப்படுமா?

திருவாடானை:  திருவாடானையில் பயனற்று சேதமடைந்த வீட்டு வசதி வா  குடியிருப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய குடியிருப்பு கட்டிங்கள் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு அலுவலர்கள் குறைந்த வாடகையில் குடியிருக்கும் வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை முறையாக பராமரிக்காததால், குடியிருப்பு கட்டிடங்களைச் சுற்றி முட்செடிகள் மண்டி இந்த கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடியிருப்பு வீடுகளை விட்டு இங்கு குடியிருந்த அரசு அலுவலர்கள் காலி செய்து விட்டனர். இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் பயனற்று சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இந்த குடியிருப்பு வீடுகளில் குடியிருந்த அரசு அலுவலர்கள் இதே பகுதிகளில் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தொண்டி, தேவகோட்டை, காரைக்குடி போன்ற நகர்ப்புறங்களில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வருவதாலும், தினசரி பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பயண நேரம் அதிகமாக உள்ளதாலும் பணிச்சுமை கூடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்து பயனற்ற நிலையில் காட்சி பொருளாக காட்சியளிக்கும். மூன்று அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை உடனடியாக அகற்றிவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டித் தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் சுப்பிரமணியன் கூறுகையில்: இந்த திருவாடானை பகுதியில் வருவாய்த்துறை நீதித்துறை, பத்திரப் பதிவுத்துறை, கால்நடை மருந்தகம், அரசு தாலுகா மருத்துவமனை பொதுப்பணித் துறை, கருவூலம், புள்ளியியல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து பணி மாறுதலாகி இந்த அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களின் நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பதற்காகவும், பணிச்சுமையை குறைப்பதற்காகவும் குறைந்த வாடகையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் குடியிருந்து வந்தனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களைச் சுற்றி  முட்செடிகள் சூழ்ந்துள்ளதாலும் இந்த 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும் மிகவும் சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளதாலும் இந்த வீடுகளில் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரமுள்ள நகர்ப்புறங்களில் குடியிருந்து வருவதாலும், தினசரி அலுவலகம் சென்று வீடு திரும்பும் பயண நேரம் அதிகரிப்பதாலும் அவர்களின் பணிச்சுமை கூடுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்து உள்ள வீட்டு வசதி வாரிய மூன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டித் தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனக் கூறினார்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை