சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருப்புவனம்: திருப்புவனம் புதூருக்கும், மடப்புரம் வைகை ஆற்றின் கரையில்  கானூர் கண்மாய் கால்வாய் முகப்புக்கும் குறுக்கே ஆற்றில்  தடுப்பணை 2005ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த தடுப்பணை சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. பின்னர் வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட  தண்ணீரால் அடுத்த சில நாட்களிலேயே தடுப்பணை இடிந்துவிட்டது. இதனால் சிறிதளவு கூட தண்ணீர் தேங்காமல் வெளியேறியதால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை.  அதனைத்தொடர்ந்து  லாடனேந்தல் அருகே புதிய தொழில் நுட்பத்துடன் ரூ.8 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணை வலது பிரதான கால்வாயில் உள்ள மார்நாடு உட்பட 9 கண்மாய்களுக்கு தற்போது வரை தண்ணீர் செல்கிறது. இடது பிரதானக் கால்வாயில் உள்ள எந்த கண்மாய்க்கும் தண்ணீர் செல்லவில்லை. இதனைப்போன்று தட்டான்குளம் பகுதி வைகை ஆற்றில் 10 கோடி மதிப்பீட்டில் தடுப்பு அணை கட்டப்பட்டது. பிரமனூர், பழையனூர் பகுதியிலுள்ள வலது பிரதானக் கால்வாயில் 21 கண்மாய்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. திருப்புவனம் பகுதியில் உள்ள இரண்டு தடுப்பணைகளும் வலது பிரதானக் கால்வாய் கண்மாய்களுக்கு மட்டுமே தண்ணீர் செல்கிறதே தவிர, இடது பிரதானக் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. திருப்புவனம் புதூர்-கானூர்கால் இடையே சேதமடைந்த தடுப்பணையை புதுதொழில் நுட்பத்துடன் கட்டினால் இடது பிரதான கால்வாயில்  மணல்மேடு, பெத்தானேந்தல், கானூர் உட்பட 9 கண்மாய்களும் அதனை சார்ந்த ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்

அனுமதியின்றி வேள்பாரி நாவலின் காட்சிகள் படமாக்கப்பட்டால் சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும்: இயக்குநர் ஷங்கர்

கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட நிலத்தில் வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு: மாவட்ட நிர்வாகம் தகவல்