சேடபட்டி அருகே வீடுகளின் முன் நின்றிருந்த 4 பசு மாடுகள் திருட்டு

பேரையூர், ஜூலை 17: பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகேயுள்ளது பூசலப்புரம். இந்த ஊரில் வசிக்கும் மக்கள் பலரும் நேற்று முன்தினம் இரவு தாங்கள் வளர்க்கும் பசு மாடுகளை வீட்டின் முன்பு கட்டியிருந்தனர். நேற்று காலை விடிந்து பார்த்தபோது ஒச்சம்மாள் என்பவருடைய 2 பசுமாடுகளும், சிவகாமி என்பவருடைய ஒரு பசுமாடும், காசிமாயன் என்பவருடைய ஒரு பசுமாடும் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அக்கம், பக்கம், பக்கத்து ஊர்களிலும் விசாரித்துப் பார்த்தும் மாயமான அவர்களின் பசுமாடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வந்த பசுமாடுகளை அடுத்தடுத்து திருடிச்சென்றது உறுதியானது. இந்த திருட்டு குறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் அல்லிகுண்டம், மற்றும் பெருமாள் கோவில்பட்டி, கணவாய்பட்டி, பகுதிகளில் ஆடுகள் தொடர்ந்து திருடு போவது குறிப்பிடத்தக்கது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை