செ.குன்னத்தூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகா உற்சவ விழா

 

செஞ்சி, ஜூலை 31: செஞ்சி அடுத்த செ.குன்னத்தூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டாள் ஸ்ரீதேவி பூதேவி தேவ வரதராஜபெருமாள் சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் ஆண்டாள் ஸ்ரீதேவி, பூதேவி தேவ வரதராஜபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் ஆண்டாள் ஸ்ரீ தேவி பூதேவி தேவ வரதராஜ பெருமாள், வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் இருந்து ஆண்டாள் திருக்கோயிலுக்கு மங்கள இசை முழங்க ஊர்வலமாக சீர் வரிசைகளுடன் அழைத்து வரப்பட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு 108 திரவியங்களுடன் யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து புரோகிதர்கள் திருமண சடங்குகளை முறைப்படி கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என்ற கரகோஷத்துடன் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

பின்னர் மங்கள இசையுடன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் பூப்பந்து எரியும் விளையாட்டு நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து ஆண்டாள் திருக்கோயில் மண்டபத்தின் எதிரில் நடைபெற்ற ஸ்ரீதேவி பூதேவி தேவ வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி திருக்கல்யாண வழிபாட்டில் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து உணவுகள் வழங்கப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை