செஸ் விளம்பரத்தில் மோடி படம் பாஜவினரை ஏன் கைது செய்யவில்லை?…கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் அத்துமீறி மோடி படத்தை ஒட்டிய பாஜவினரை ஏன் கைது செய்யவில்லை என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்படாத போது, தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் அவரது படம் இல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் தான் பாஜவினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை. பிரதமர் மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாக ஆத்திரம் கொண்ட தமிழர்கள் சிலர் மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு