செஸ் ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆலோசனை: செஸ் சம்மேளனத்தின் உயரதிகாரி பங்கேற்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், இந்தியா, சீனா, ரஷ்யா, ஸ்வீடன் அமெரிக்கா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.  இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் போலீஸ் உயரதிகாரிகள், சர்வதேச செஸ் சம்மேளத்தின் உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் நடைப்பெற்றது. காஞ்சிபுரம் டிஐஜி சத்தியபிரியா தலைமை தாங்கினார். ஆலோசனை கூட்டத்தில் ரஷ்யா நாட்டை சேர்ந்த சர்வதேச செஸ் சம்மேளனத்தின் உயரதிகாரி ஆன்ட்டன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று, போட்டி நடைபெறும் இடத்துக்கு வீரர், வீராங்கனைகள் மற்றும் விஐபிகள், பார்வையாளர்களை எந்தெந்த வழிகளில் அழைத்து வந்து பாதுகாப்பாக அமர வைப்பது, வீரர், வீராங்கனைகளை போட்டி முடிந்து தங்கும் அறைக்கு அழைத்து செல்வது, அதேபோன்று, காய்கறிகள், மளிகை பொருட்களை கொண்டு வருபவர்களை அனுமதிப்பது, வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சர்வதேச சம்மேளனத்தின் உயரதிகாரி ஆன்ட்டன் போட்டி நடைபெறும் இடத்தின் வரைபடத்தை பார்வையிட்டு, அருகில் புதிதாக அமைய உள்ள அரங்கம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு மாட்ட எஸ்பி சுகுணா சிங், மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதிஸ்வரன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா, திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஏசுதாஸ், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருங்மாங்கதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்