செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான விதிமுறைகள் குறித்து விளக்கம்; பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்பு..!!

செங்கல்பட்டு: நாளை முதல் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான விதிமுறைகள் குறித்து வீரர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா இன்று மாலை நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 189 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். மொத்தம் 11 சுற்றுகளாக செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. வீரர்கள் அனைவரும் மாமல்லபுரத்தை சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள் குறித்து வீரர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை விளக்கும் நிகழ்வில் இந்திய வீரர்கள் உட்பட பல்வேறு நாட்டு அணியினர் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் நடுவர்களும் கலந்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி செஸ் கூட்டமைப்பின் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாளை போட்டி எவ்வாறு நடைபெறும். எவ்வளவு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். போட்டியில் பயன்படுத்தக்கூடிய செஸ் போர்ட் இருக்கக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் போட்டியின் போது எத்தகைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எதிரணியை சேர்ந்த வீரர், விதிமுறை மீறலில் ஈடுபடும் போது எந்த நடுவரிடம் முறையிட வேண்டும். அதுகுறித்து எவ்வாறு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. …

Related posts

திமுக ஆட்சியில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டது: துணை முதலமைச்சர்

ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்

கடையநல்லூர் அருகே ரயிலை கவிழ்க்க இஸ்லாமியர்கள் சதி செய்ததாக பரவும் செய்தி வதந்தி : TN Fact Check விளக்கம் !