செவலூர் ஊராட்சியில் ரூ.4.10 கோடியில் சாலை அமைக்கும் பணி

பொன்னமராவதி, ஜூலை 2: பொன்னமராவதி அருகே செவலூர் ஊராட்சியில் ரூ.4.10கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செவலூர் ஊராட்சியில் சாலைகள் மிகவும் மோசமாக கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று செவலூரிலிருந்து மலையடிப்பட்டி வரை தார்சாலை அமைக்க ரூ.4.10 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.
இச்சாலை அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா முத்துக்குமார், திமுக நிர்வாகிகள் ஆலவயல் சாமிநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒப்பந்ததாரர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை