செல்வவிநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா

மானாமதுரை, செப். 5: மானாமதுரை அருகே கல்குறிச்சி புறவழிச்சாலை அருகே உள்ள எஸ்எஸ்கே நகரில் உள்ள செல்வ விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. மானாமதுரை கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட எஸ்எஸ்கே நகரில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வருஷாபிஷேக விழா நடந்தது. அதிகாலையில் விநாயகருக்கு சந்தனம், பன்னீர், பால், இளநீர் உள்ளிட்ட 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் வஸ்திரங்கள் மலர்மாலைகள் வெள்ளிக்கவசம் உள்ளிட்டவகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கணபதி ஹோமத்திற்குப்பின் தீபராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி காளியப்பன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை