செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் விழா

ஈரோடு, ஏப் 13: ஈரோடு நேதாஜி சாலை முனிசிபல் சத்திரத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் குண்டம் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் நடப்பாண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 9ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம், பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தி வந்தும் அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் குண்டம் பற்ற வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விழாவின் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோயில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். இவரை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் ஏராளமானோர் குண்டம் இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மாலை மாவிலக்கு ஊர்வலமும் நடந்தது. விழாவையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு அறுவால் மீது ஏறி அருள் வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
இன்று(13ம் தேதி) மாலை மறுபூஜை செய்யப்பட்டு, கும்பம் ஆற்றில் விடப்படுகிறது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை