செல்லாண்டிபாளையம் பகுதியில் குடிநீர் மேல்நிலை தொட்டியை சுற்றி சுற்றுச்சுவர்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த தொட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.மேல்நிலைத் தொட்டி வெட்ட வெளியில் எந்தவித பாதுகாப்பும் இன்றி உள்ளது. இதனால், இரவு நேரங்களில் ஒரு சிலர் மேல்பகுதியில் ஏறி சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த தொட்டி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.எனவே, அனைவரின் நலன் கருதி மேல்நிலை தொட்டி வளாகத்தை சுற்றிலும், யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் சுற்றுச் சுவர் அமைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் பார்வையிட்டு இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்