செல்போன், பணம் பறித்தவர்கள் கைது

 

செங்கல்பட்டு, ஜன.1: சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொண்டமங்கலம் கிராமத்தில் பூபாலன் (34) என்பவர் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு வட மாநிலத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 10ம் தேதி இரவு வட மாநில இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டிற்குள் அத்து மீறி நான்கு மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர், வீட்டில் இருந்த வடமாநில இளைஞர்களை கத்தியால் வெட்டிவிட்டு 3 செல்போன்கள், ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து, பூபாலன் மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த வெஸ்லி (24), விக்கி (29), ஜேம்ஸ் (29) மற்றும் வளர்க்குன்றம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (19) ஆகியோர் செல்போன், பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை