செறிவூட்டப்பட்ட உணவு!

ஒரு குறிப்பிட்ட உணவில் கூடுதலாக ஏதேனும் ஒரு சத்தைச் சேர்த்துத் தரும்போது அந்த உணவுப்பொருள் மேலும் செறிவானதாக மாறுகிறது. இதுதான் ஃபுட் ஃபோர்ட்டிபிகேஷன். மிகச் சிறந்த உதாரணம்  என்றால் ஐயோடின் சேர்க்கப்பட்ட உப்பு. தொன்னூறுகளுக்கு முன்பு உலகம் முழுதும் அயோடின் உப்பு என்ற கருத்தாக்கம் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. 1992ம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ  மாநாட்டில்தான் இந்த ஃபுட் ஃபோர்ட்டிபிகேஷன் என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. உலகம் முழுதும் நுண்ணூட்டச்சத்துக் கோளாறுகளால் பல லட்சம் குழந்தைகள் இறந்துகொண்டிருந்த சூழலில்  தினசரி அவர்கள் எடுக்கும் உணவில் போதாமை உள்ள அடிப்படை சத்துகளை செறிவூட்டிக் கொடுப்பதன் மூலம் சத்துக் குறைமானத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.  அதன்படி, அயோடின் குறைபாடு, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, ஃப்ளோரைடு சமனாக்கம் உட்பட பல்வேறு வகையான தாதுப் பொருட்களையும் உணவுப் பொருட்களில் செறிவூட்டும் முறை உருவானது. அதன்பிறகு இந்த ஊட்டச்சத்துக் போதாமைகள் ஓரளவு கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன….

Related posts

தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் சரக்குகளை கையாள ஓசூர்-பரந்தூரில் கார்கோ கிராமம்: பன்முக லாஜிஸ்டிக்ஸ் பூங்காவும் அமைக்க திட்டம்

பெரம்பலூரில் ₹2,440 கோடியில் காலணி பூங்கா விரிவாக்கம்; 2028க்குள் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு: வெளிநாட்டு ஏற்றுமதியில் முக்கிய பங்கு

சென்னையில் 10,000 அதிநவீன இலவச கழிவறைகள்: பராமரிப்பு சரியில்லை எனில் புகார் அளிக்கலாம்