செயல்பாடற்ற சுங்கச்சாவடியால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம்

பொங்கலூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதப்பூரில் கடந்த சில ஆண்டுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் கண்ணாடிப் பெட்டியில் வரிவசூல் இயந்திரங்கள், தொழிலாளர்கள் தங்கும் அறைகள்,குடிநீர் வசதி,மின் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. இந்த சாலையின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்ட புதிதில் உள்ளூர் வாகன ஓட்டிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக இந்த சுங்கச்சாவடியானது செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும், வேகத்தடையும் இல்லாத காரணத்தால் புதிதாக இந்த சாலையின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதனால் உயிர் பலியாவதும் தொடர்கிறது. மேலும் சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான வரிவசூல் இயந்திரங்கள், கண்ணாடி கூண்டுகள் மாயமாகி விட்டதாகவும் எனவே மனித உயிர்களை காவு வாங்கும் இந்த சுங்கச்சாவடியை உடனடியாக அகற்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உயிருக்கு மாவட்ட அரசு நிர்வாகம் உத்திரவாதம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை