செம்பாக்கம், கிழக்கு தாம்பரம் பகுதிகளில் ரூ.37.59 கோடியில் வடிகால் பணி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

 

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில், மழை வெள்ள காலங்களில் மக்கள் பாதிக்காத வகையில், சாலை மற்றும் தெருக்களில் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலம் 22வது வார்டு, செம்பாக்கம், ஜெயின் நகர் பகுதியில் நடைபெறும் வடிகால் பணிகளை தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஜான்லூயிஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தர
விட்டார்.

தொடர்ந்து, 1வது மண்டலம், 2வது வார்டு பம்மல், குருசாமி நகர் பகுதியில் நடைபெறும் வடிகால் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி இளநிலை பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். அதேபோல், 4வது மண்டலம், 32வது வார்டு பள்ளிக்கூடம் தெரு பகுதியில் நடைபெறும் வடிகால் பணிகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை