செம்பனார்கோயில் அருகே பஸ் நிறுத்த நிழற்குடை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செம்பனார்கோயில் : செம்பனார்கோயில் அருகே பஸ் நிறுத்த நிழற்குடை சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பூம்புகார் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். மேலும் கீழப்பெரும்பள்ளம் கேது கோயில், திருவெண்காடு புதன் கோயில் மற்றும் அங்கு உள்ள பஞ்ச நரசிம்மர் கோயில்களுக்கு பக்தர்கள் வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் பஸ், கார், டூரிஸ்ட் வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட பொன்செய் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடை சேதமடைந்து காட்சியளிக்கிறது. அந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால் பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கான்கிரீட் பெயர்ந்து மேலே விழுந்தது விபத்து ஏற்படுமோ என்று அச்சத்துடன் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.மேலும் மழை பெய்தால் அந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் மழையில் நனையாமல் ஒதுங்குவதற்கு லாயக்கற்றதாக உள்ளது. அங்கு பயணிகள் உட்காரும் சிமெண்ட் கட்டையும் உடைந்து காணப்படுகிறது.எனவே மேற்படி நிழற்குடையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்….

Related posts

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை