செம்பனார்கோயில் அருகே சம்பா சாகுபடி பயிர்கள், வடிகால் பணிகள்

 

செம்பனார்கோயில், நவ.24: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில் மழைநீர் சூழ்ந்து வடிந்துள்ள சம்பா சாகுபடி நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அப்பகுதியில் சாகுபடி பரப்பளவு விவரங்களை வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, செம்பனார்கோயில் வட்டாரத்திற்குட்பட்ட தலைச்சங்காடு கிராமம் காந்தி நகரில் உள்ள வடிகால் வாய்க்கால் பகுதியை பார்வையிட்டு, தங்குதடையின்றி மழைநீர் செல்வதற்கு ஏதுவாக வாய்க்கால்களில் செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளனவா என்பதை பார்வையிட்டார்.

பின்னர், தலையுடையவர்கோவில்பத்து கிராமத்தில் உள்ள தாமரைகுளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, செம்பனார்கோயில் ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, தரங்கம்பாடி தாசில்தார் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை