செப்.1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரிகளுக்குத் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வரவேண்டும் : அமைச்சர் பொன்முடி

சென்னை,:செப்டம்பர் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரிகளுக்குத் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வரவேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க இருக்கும் நிலையில், சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 112 அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி உள்ளோம். சுகாதாரத்துறை உதவியோடு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இத் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். மேலும், செப்டம்பர் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தான் கல்லூரிக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டாலே போதுமானது.கொரோனா பெருந்தொற்றை ஒழிக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உயர் கல்வித்துறை என்றும் உறுதுணையாக இருக்கும். கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் நேரடியாகக் கல்லூரிக்கு வந்துசெல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் அரசும் கல்லூரியும் இணைந்து மேற்கொள்ளும்,’என்றார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்