சென்னை: சென்னை விமான நிலையத்தின் புதிய இயக்குனராக டாக்டர் சரத்குமார் நேற்று பொறுப்பேற்றார். சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே இயக்குனராக இருந்த சுனீல்தத், இந்திய விமான நிலையங்களின் ஆணைய செயல் இயக்குனராக டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில், இன்ஜினியரிங் மற்றும் திட்ட பொதுமேலாளராக சரத்குமார் பணியாற்றினார். சென்னை விமான நிலையத்தின் 2வது முணையத்தை, நவீனப்படுத்தும் திட்டத்தின் தலைமை பொறுப்பிலும் இருந்தார்.இந்தியாவில் விமான நிலையங்களை நவீனப்படுத்துதல், பராமரித்தல், கட்டுமானத்தில், அனுபவம் மற்றும் நிபுணத்துவம் பெற்றவர். ஜம்மு விமான நிலையத்தில்,1990ல் பணியைத்துவங்கினார். மும்பை, டெல்லி, கோவா உட்பட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். தற்போது சென்னை விமான நிலைய இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்….