சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தல்

 

பழநி: சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கந்தசாமி அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, பழநி கோயிலுக்கு ரயில் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் இரவு தங்குவதற்கு வசதியாக பழநி ரயில் நிலையத்தில் படுக்கை வசதியுடன் கூடிய டார்மென்டரி கட்டிக் கொடுக்க வேண்டும். பழநி ரயில் நிலையத்தை சுற்றியும், பணியாளர் குடியிருப்பு பகுதியிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து உள்ளது.

இதனால் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் குடியிருப்புவாசிகள் மற்றும் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் எற்படுத்துவதாய் உள்ளது. எனவே, முழுமையாக சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பாலக்காடு-திருச்செந்தூர் ரயில் மற்றும் பாலக்காடு&சென்னை ரயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும். கோவை-ராமேஷ்வரம், பாலக்காடு&ராமேஷ்வரம், கோவை&கன்னியாகுமரி, கோவை-திருப்பதி, கோவை-நாகர்கோவில் போன்ற ரயில்களை பழநி வழித்தடத்தில் இயக்க வேண்டும். , கோவை-பழநி-திண்டுக்கல்-திருச்சி-வேளாங்கன்னி ரயில்கள் இயக்க வேண்டும். மதுரையில் இருந்து பழநி வழித்தடத்தில் மங்களூரு வரை விரைவு ரயில் இயக்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

Related posts

தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டர் மாயம்\

வியாபாரியை மிரட்டியவருக்கு வலை

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சருக்கு பாஜவினர் வரவேற்பு