சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் 28 வார்டுகளில் 3, 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 178 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 15 இடங்கள், பாஜ 1 இடம், அமமுக 1 இடம் மற்றும் சுயேச்சைகள் 5 இடங்களை கைப்பற்றினர். மாநகராட்சி தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிட் இழந்து பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக சென்னை மாநகராட்சி தேர்தலில் 28 வார்டுகளில் 3வது மற்றும் 4வது இடத்திற்கு வர சுயேச்சைகளுடன் கடுமையாக போராடியுள்ளது. குறிப்பாக, 2வது வார்டு, 15வது வார்டு, 28வது வார்டு, 72வது வார்டு, 81வது வார்டு, 82வது வார்டு, 86வது வார்டு, 95வது வார்டு, 112வது வார்டு, 116வது வார்டு, 118வது வார்டு, 119வது வார்டு, 129வது வார்டு, 133வது வார்டு, 134வது வார்டு, 144வது வார்டு, 164வது வார்டு, 165வது வார்டு, 174வது வார்டு, 185வது வார்டு, 187வது வார்டு, 192வது வார்டு, 194வது வார்டு, 199வது வார்டுகளில் அதிமுக 3வது இடத்திற்கு கடுமையாக போராடி உள்ளது.அதேபோல், 25வது வார்டு, 33வது வார்டு, 92வது வார்டு, 189வது வார்டுகளில் அதிமுக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குறைந்தளவாக 189வது வார்டில் 528 வாக்குகள் பெற்று அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. இந்த 4 வார்டுகளில் அதிமுக 4வது இடத்தை பிடிக்க பாமக, சுயேச்சைகளுடன் கடுமையாக போராடி வாக்குகள் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக சென்னை மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் 3வது மற்றும் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை