சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் விதிமீறி சுவரொட்டி ஒட்டிய 252 பேர் மீது போலீசில் புகார்: ரூ.1,21,600 அபராதம் வசூல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு மற்றும் சாலைகளில் உள்ள பெயர் பலகைகளில் சுவரொட்டி ஒட்டிய 252 பேர் மீது போலீசில் புகார் அளித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில், பொது இடங்கள் மற்றும் சாலையோரம் உள்ள திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில், தனி நபர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால், மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959ன்படி நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவோ, அனுமதியின்றி விளம்பர பதாகைகளை அமைக்கவோ கூடாது. ஆனால், அதைமீறி பல்வேறு இடங்களில் இவ்வாறு சுவரொட்டி ஒட்டப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், சென்னையில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, தொடர்புடைய நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி கடந்த மாதம் நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 30 வரை சென்னையில் 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடம் ரூ.1,37,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்திய சோதனையில், போஸ்டர் ஒட்டியவர்களுக்கு ரூ.1,21,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டிய 252 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே, சென்னை மாநகரின் பொது இடங்கள் மற்றும் மாநகராட்சி, அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தெரு, சாலைகளின் பெயர் பலகைகள், இதர அறிவிப்பு பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.முன்மாதிரி திட்டம்சென்னை மாநகரை சர்வதேச நகரங்களுக்கு  இணையாக கட்டமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு  முன்மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரை  தூய்மையுடனும், அழகுடனும் பராமரிக்க மாநகராட்சியின் சார்பில் கண்கவரும்  வண்ண ஓவியங்கள் வரைதல், செயற்கை நீரூற்றுகள் அமைத்தல், சாலை மையத்  தடுப்புகளில் அழகிய செடிகளை அமைத்தல் என பல்வேறு நடவடிக்கை  எடுக்கப்பட்டாலும், சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தவிர்ப்பதில் பொதுமக்கள்  மற்றும் பிற அமைப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959ன்படி நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவோ, அனுமதியின்றி விளம்பர பதாகைகளை அமைக்கவோ கூடாது. ஆனால், அதைமீறி பல்வேறு இடங்களில் இவ்வாறு சுவரொட்டி ஒட்டப்படுகிறது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்