சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 21,48,912 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வரை 21,48,912 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தடுப்பூசி முகாம்களின் வாயிலாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 9ம் தேதி வரை15 லட்சத்து 59 ஆயிரத்து 783 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5 லட்சத்து 86 ஆயிரத்து 897 பேருக்கும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து  21 லட்சத்து 46 ஆயிரத்து 680 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி செலுத்திய சதவீதம் 66.31 ஆகும். மேலும் நேற்று 2,327 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை 21,48,912 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில் இதுவரை வியாபாரிகளுக்கு 8,239 கோவிட் தடுப்பூசிகளும், காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாமில் வியாபாரிகளுக்கு 2,143 தடுப்பூசிகளும், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 89 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.  …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை