சென்னை மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகும் குளோரின் மாத்திரைகள் விநியோகம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: மழைநீர் தேங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகும் குளோரின் மாத்திரைகள் தரப்படுகிறது. பொதுமக்களுக்கு 15 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை 7,25,000 குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் நீரில் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை