சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் சட்டத்தில் திருத்தம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்

சென்னை: பேரவையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மசோதா ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில், சென்னையில் தனியார் வளாகம் மற்றும் தனியார் தெரு இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்திற்குள் வாரியத்தின் கழிவுநீர் பாதை இருந்தால், அதன் உரிமையாளர் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு அதற்கான அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இணைப்பு வழங்குவதில் வாரியத்திற்கு ஏற்படும் செலவுகளை வளாகம் மற்றும் தனியார் தெருவின் உரிமையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து கழிவுநீரை தொட்டி, கழிவுநீர் குட்டை, கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் என்று எந்த வழிமுறையிலும் அகற்றக் கூடாது.

இந்த சட்டத்தை மீறினால் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விதியை மீறினால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவினால் பாதிக்கப்பட்டவர்கள், விதியை மீறியதற்காக ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மேலாண்மை இயக்குனரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்