சென்னை பல்கலையில் தொலைதூர கல்வி மூலம் எம்.எல். படிப்புகளை வழங்க தடைகோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை:  எம்.எல். படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் வழங்க, சென்னை பல்கலைக்கழகத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்வி துறை சார்பில் முனைவர் படிப்புகளையும், எம்.எல். வகுப்புகளையும் நடத்தி வருகின்றன. 2020-21ம் கல்வியாண்டில் 246 மாணவர்கள், எம்.எல். வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.  தொலைதூர கல்வி மூலம் எல்.எல்.எம். படிப்புகளை முடித்தவர்களை சட்டகல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக கருதக்கூடாது என்று இந்திய பார் கவுன்சில் 2012ல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டம் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளை ஆன்லைன் மூலமாகவோ, தொலைதூர கல்வி மூலமோ, தனி தேர்வர்களாகவோ பயிற்றுவிக்க பல்கலைக்கழக மானியக் குழு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு, பார் கவுன்சில் விதிகளுக்கு முரணாக, சென்னை பல்கலைக்கழகம் சட்டக் கல்வி தொடர்பான படிப்புகளை தொலை தூர கல்வி மூலம் வழங்கி வருகிறது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும். 2020-21ம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுக்குமாறு சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு