சென்னை -சேலம் 8 வழி சாலை திட்டத்தை மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கடுமையாக எதிர்க்கும்: முத்தரசன் பேட்டி

சென்னை: சென்னை -சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கடுமையாக எதிர்த்தது, இன்றும் எதிர்க்கும் என முத்தரசன் கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த  பேட்டி:  விலைவாசி உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வரும் 30ம் தேதி 150 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வலுக்கட்டாயமாக மின்சார சட்ட திருத்த கொண்டு வந்தால் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் போராட்டம் நடைபெறும். தமிழகத்திலும் மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.  வரும் 17ம் தேதி திருப்பூரில் நடைபெறும் மாநில குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பங்கேற்று அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் மட்டுமே தமிழக அரச வழங்குகிறது. 3 மடங்கு இழப்பீடு தரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்படும் பொதுமக்களை தமிழக அரசு நேரில் சந்திக்க வேண்டும். சென்னை -சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கடுமையாக எதிர்த்தது, இன்றும் எதிர்க்கும். இவ்வாறு கூறினார்….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை