சென்னை கொடுங்கையூரில் பரபரப்பு: சிலிண்டர் வெடித்ததில் டிபன் கடை, கறிக்கடை தீயில் எரிந்து சேதம்

சென்னை: சென்னை கொடுங்கையூரில் சிலிண்டர் வெடித்ததில் டிபன் கடை மற்றும் கறிக்கடை தீப்பிடித்து எரிந்து பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் அண்ணாசாலையில் டிபன் கடை நடத்தி வருபவர் சீதாலட்சுமி. இவரது கடைக்கு அருகில் கறிக்கடை நடத்தி வருபவர் ஜினத்பானு. இன்று அதிகாலையில் டிபன் கடை திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. டிபன் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ பரவி அருகில் இருந்த கறிக்கடைக்கும் பரவியது. அக்கம்பக்கத்தினர் கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு, பின்னர் டிபன் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தீவிபத்தில் டிபன் கடையில் இருந்த சமையல் பாத்திரம், ஸ்டவ், கறிக்கடையில் இருந்த பிரிட்ஜ், டிவி, எடை மிஷின் போன்ற பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்து தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு