சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி என பெயர் சூட்ட வேண்டும்: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வலியுறுத்தல்

சென்னை:  அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று முன்தினம் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன்திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ நெல்லிகுப்பம் புகழேந்தி மற்றும் திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் மார்ச் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பொருள் கொடுப்பது, அசைவ உணவுகள், நோட்டுப் புத்தகங்கள், நலப்பணிகள் வழங்கப்படுதல். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி என பெயர் சூட்ட ஒன்றிய அரசை வலியுறுத்தல். நள்ளிரவும் தேநீர் கடை திறக்க அனுமதி வேண்டும். கோவிலை சார்ந்து வாழும் வீடுகளுக்கு திடீரென 300%, 500% என கடைசி காலத்தில் அதிமுக அரசு வாடகை உயர்த்த உத்தரவிட்டது. அதை ரத்து செய்து படிப்படியாக வாடகை குறைக்கும்படி மாநில அரசை வேண்டுதல். மேலும், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு அமோக வெற்றி தந்த தமிழக மக்களுக்கு நன்றி. ஆளுங்கட்சியாக இருந்தாலும் வன்முறை, எதிர்கட்சியாக இருந்தாலும் வன்முறை என கேவலமான கரங்களுடன் உலாவரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவை அடக்கி வைத்திட தமிழக அரசை வேண்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. …

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு