சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு: தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கழுத்துப் பட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக பல இடங்களில் வெயில் சதத்தை தாண்டியும் சுட்டெரிக்கிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். இந்நிலையில் அதிக வெயில் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை வழக்கறிஞர்கள் சங்க கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார். எனினும்,வழக்கறிஞர்கள் கட்டாயம் கருப்பு கோட் மற்றும் கழுத்துப் பட்டையை அணிய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை