சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு:  தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகையினை மின் துண்டிப்பு/மறு இணைப்பு மற்றும் தாமத கட்டணமின்றி செலுத்துவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் 8.11.2021 முதல் 15.11.2021 வரை உள்ளவர்களுக்கு மின்கட்டணம் செலுத்த தற்போதைய கடைசி நாளிலிருந்து கூடுதலாக 15 நாட்கள் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் 16.11.2021 முதல் 29.11.2021 வரை உள்ளவர்கள் மின்கட்டணத்தை 30.11.2021 வரை செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை